டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்து அணி முதல் முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வாரந்தோறும் சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இந்த வாரத்திற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதன் விபரத்தை பார்க்கலாம்.

இந்த பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணி, 116 மதீப்பிட்டு புள்ளிகளுடன் தொடர்ச்சியாக முதலிடத்தில் நீடிக்கின்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 107 மதீப்பிட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், நியூஸிலாந்து அணி தரவரிசையில் இரண்டாவது இடம்பிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, 5 புள்ளிகளை இழந்து 105 மதீப்பிட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணியிடம் தென்னாபிரிக்க அணி முழுமையாக இழந்ததையடுத்து, அந்த அணி இந்த சரிவை சந்தித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 104 மதீப்பிட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. தசம புள்ளிகள் பின்னிலையில், இங்கிலாந்து அணி 104 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி 93 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்ததன் மூலம் இலங்கை அணிக்கு நான்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 88 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் மேற்கிந்திய தீவு விண்டிஸ் கிரிக்கெட் அணி 77 மதீப்பிட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளன. பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 69 மதீப்பிட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், சிம்பாப்வே கிரிக்கெட் அணி 13 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை