தேசிய கரம் ஒற்றையர் பிரிவுகளில் சஹீட், சலனிக்கு சம்பியன் பட்டம்

தேசிய கரம் சம்பியன் பட்டத்தை மூன்றுதடவைகள் வென்றவரும்,நடப்பு உலக கரம் ஒற்றையர் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோவை வீழ்த்தி இவ்வருடத்துக்கான தேசிய கரம் சம்பியனாக கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹீட் ஹில்மி தெரிவானார்.

கடந்தமாதம் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற சஹீட்,முதற்தடவையாக தேசிய கரம் சம்பியனாகத் தெரிவானார்.

இலங்கை கரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 51ஆவது சம்மேளனக் கிண்ண கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கொஹுவளையில் அமைந்துள்ள இலங்கை கரம் சம்மேளன தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுமார் ஒருமாதங்களாக நடைபெற்ற இம்முறை தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் நாடாளவிய ரீதியிலிருந்து சுமார் 350 வீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் நிஷாந்த பெர்னாண்டோவை எதிர்கொண்ட கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹீட் ஹில்மி, 2--1 ஆட்டங்கள் (22--25, 25--00, 25--06) அடிப்படையில் வெற்றிபெற்று தேசிய கரம் சம்பியன்ஷிப் தொடரில் முதற்தடவையாக சம்பியனாகத் தெரிவானார்.

2011ஆம் ஆண்டுமுதல் தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சஹீட், 2014ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுவந்த அவர், இம்முறை முதலிடத்தைப் பெற்றுஅசத்தினார்.

இம்முறை தேசிய கரம் சம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவுமற்றும் கலப்புபிரிவு ஆட்டங்களில் போட்டியிட்ட சஹீட்டுக்கு மூன்றாவது சுற்றுடன் வெளியேறநேரிட்டது.

முன்னதாககடந்தமாதமுற்பகுதியில் நடைபெற்றசம்மேளனக் கிண்ண கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும் முதற்தடவையாக சஹீட் ஹில்மி சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த சலனிலக்மாலி இரண்டுசம்பியன் பட்டங்களைவென்றுஅசத்தியிருந்தார்.

பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் இராணுவத்தின் ரெபேகாடெல்ரினை 2--1 என்றகணக்கில் (25--23, 16--25, 25--00) வீழ்த்தி இலங்கை விமானப் படையைச் சேர்ந்த சலனிலக்மாலி சம்பினானார்.

அதனைத் தொடர்ந்து கலப்புப் பிரிவில் உதேஷ் சந்திமவுடன் களமிறங்கிய சலனி, 2-0 எனநேர் ஆட்டங்கள் கணக்கில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அனஸ் அஹமட் மற்றும் ரெபேகாடெல்ரினை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்தமாத முற்பகுதியில் நடைபெற்ற சம்மேளனக் கிண்ண கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தைவென்ற ஜோசப் ரொஷிட்டாவுக்கு இம்முறை தேசிய கரம் சம்பியன்ஷிப்பில் காலிறுதிச் சுற்றுடன் வெளியேற நேரிட்டது.

எனினும்,நுகேகொட மஹமாயா கல்லூரி மாணவி தாருஷா ஹிமாஹன்சிகவுடன் ஜோடி சேர்ந்து பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட ரொஷிட்டா, 2--0 என்றநேர் ஆட்டங்கள் கணக்கில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தமதுவன்திகுணதாசமற்றும் எம். சித்ராதேவி ஆகியோரை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, 2010ஆம் ஆண்டுமுதல் தேசியகெரம் சம்பியன்ஷpப் போட்டித் தொடரில் பங்குபற்றிவருகின்ற கொழும்பைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா, 2010, 2012, 2014, 2015, 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஒற்றையர் பிரிவு சம்பியனாகத் தெரிவானார்.

எனினும், இம்முறைபோட்டிகளில் அவருக்குகாலிறுதிச் சுற்றுடன் வெளியேற நேரிட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சிரேஷ்ட வீரர்களுக்கான வெட்டரன்ஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தெமடகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் ஹீனைட் ஹடீம் 2--1 ஆட்டங்கள் (24--23, 19--25, 25--24) கணக்கில் இலங்கை பாராளுமன்ற அணியைச் சேர்ந்த உபாலி பிரேமசந்திரவை வெற்றிகொண்டார்.

(பீ.எப் மொஹமட்)

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை