இளவரசியை வேட்பாளராக்கிய தாய்லாந்து கட்சிக்கு நெருக்கடி

தாய்லாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு இளவரசி ஒருவரை நிறுத்திய தாய் ரஸ்கா சார்ட் கட்சியை கலைக்கும்படி கோரி அந்நாட்டு தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு நீதிமன்றத்தை கேட்டுள்ளது.

இளவரசி எபோல்ரடானா ராஜகன்யா சிறிவதானா பர்னவதியை முன்மொழிந்து, அந்தக் கட்சி தேர்தல் சட்டத்தை மீறி இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. “இது அரசியலமைப்பு முடியாட்சிக்கு விரோதமான செயல்” என்று அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் அந்த இளவரசி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தேர்தல் ஆணையத்தால் தகுதி இழப்புச் செய்யப்பட்டது. எனினும் முடியாட்சி அரசியலுக்கு மேலால் கருதப்படுவதோடு அரசியல் பிரச்சினை ஏற்படும்போதே முடியாட்சி அதில் தலையிட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு தம்மால் ஏற்பட்ட சிக்கல்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அந்த இளவரசி குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் தாய்லாந்தில் வரும் மார்ச் 24 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை