புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி மீண்டும் சம்பியன்

புத்தளம் கோட்டக்கல்வி காரியாலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியிலும் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர் அணியினரே மீண்டும் சம்பியானாகியுள்ளனர்.

இந்த போட்டிகள் வியாழக்கிழமை (21) புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, மணல் குன்று முஸ்லிம் மஹா வித்தியாலயம், நான்காம் மைல் கல் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலயம், தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயம், இந்து மத்திய கல்லூரி, சென்மேரிஸ் தமிழ் மஹா வித்தியாலயம், மயிலங்குளம் சிங்கள வித்தியாலயம் ஆகிய ஏழு பாடசாலை மாணவர்களின் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

விலகல் முறையிலான இந்த தொடரில் முதலாவது அரை இறுதி போட்டி ஸாஹிரா தேசிய கல்லூரி அணிக்கும், வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்றபோது ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 02 : 00 கோல்களினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மணல் குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய அணிக்கும், தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் மணல் குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய அணி 02 : 00 கோல்களினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ஸாஹிரா தேசிய கல்லூரி அணிக்கும், மணல் குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய அணிக்குமிடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி 02 : 00 கோல்களினால் வெற்றி பெற்றதன் மூலம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணி முதலாம் இடத்தினை பெற்று சம்பியானாகியதோடு இரண்டாம் இடத்தினை மணல் குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய அணி பெற்றுக்கொண்டது.

மூன்றாம், நான்காம் இடங்களை தெரிவு செய்யும் நோக்கில் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய அணி 02 : 00 கோல்களினால் வெற்றி கொண்டு மூன்றாம் இடத்தினை தக்க வைத்துக்கொண்டது.

உடற்கல்வி பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் முஹம்மது ஹனிபாவின் வழிகாட்டலில் இந்த போட்டி தொடர் ஏற்பாடாகி இருந்தது. சம்பியனான புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அணியினை கல்லூரியின் உடற்கல்வி போதனாசிரியர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் வழிநடத்தி இருந்தார். நடுவர்களாக உடற்கல்வி போதனாசிரியர்கள் கடமையாற்றினர்.

புத்தளம் தினகரன் நிருபர்

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை