சம்பள பிரச்சினை சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த உப குழு

Rizwan Segu Mohideen
சம்பள பிரச்சினை சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த உப குழு-Cabinet Appointed sub committee Approved to implement the salary issue recommendations

அரசாங்க ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அதனடிப்படையில் சிபாரிசுகளை முன்வைத்த சம்பள ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரச துறையில் உள்ள சம்பள கட்டமைப்பு ஆய்வு செய்து தற்பொழுது ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு விசேட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நியமிக்கபட்டது.

அதற்கமைய இந்த விசேட ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிசிரிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 02/13/2019 - 18:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை