அமெரிக்காவுடனான பேச்சு: தலிபான் நிறுவனர் பங்கேற்பு

கட்டாரில் இந்த வாரம் நடைபெறும் அமெரிக்காவுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு தலிபான்களின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் கானி பரதாரும் பங்கேற்றுள்ளார்.

எட்டு ஆண்டுகள் பாகிஸ்தான் தடுப்புக்காவலில் இருந்த பரதார் கடந்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது கட்டாரில் உள்ள தலிபான் அலுவலகத்திற்கு பொறுப்பாக உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நீடித்து வரும் 17 ஆண்டு மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக கடந்த மாதம் கட்டாரில் இடம்பெற்ற அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனை அமெரிக்க விசேட பிரதிநிதி சல்மே கலீல்சாத் மற்றும் தலிபான்கள் உறுதி செய்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதற்கு பகரமாக அமெரிக்கா மீதான தீவிரவாத தாக்குதலுக்கு ஆப்கானை பயன்படுத்துவதை தவிர்க்க தலிபான்கள் உறுதி செய்வது தொடர்பில் கடந்த சுற்று பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஆப்கான் அரசை ஒரு கைப்பாவை என்று குறிப்பிடும் தலிபான்கள் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை