போலி கிம் வியட்நாமில் இருந்து நாடு கடத்தல்

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் வருகையை ஒட்டி அவர் போன்று வேசமிட்டிருக்கும் நபர் ஒருவர் வியட்நாமில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். வட கொரியத் தலைவர் இந்த வாரம் வியட்நாம் தலைநகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ளார்.

ஹொங்கொங்கைச் சேர்ந்த ஹோவார்ட் எக்ஸ் என்ற கிம் போன்று வேசமிட்டிருப்பவர் கடந்த வாரம் டிரம்ப் போன்று வேசமிட்டிருக்கும் ரஸல் வைட்டுடன் போலியான சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த இருவரும் வியட்நாம் பொலிஸாரின் விசாரணைக்கு முகம்கொடுத்தனர். இதனை அடுத்து ஹோவார்ட் எக்ஸின் விசா செல்லுபடியற்றது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“கிம் ஜொங் உன் போன்ற தோற்றத்தில் பிறந்ததே நான் செய்த குற்றம்” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். இந்நிலையில் அவர் நேற்று வியட்நாமில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

டிரம்ப் போன்ற தோற்றம் கொண்ட வைட்டுக்கு வியட்நாமில் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டபோதும் பொது இடங்களில் வேசமிட்டு தொன்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை