சீனா மீதான கூடுதல் வரியை ஒத்திவைத்தது அமெரிக்கா

சீன இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதனை அறிவித்தார்.

வொஷிங்டனில் இருதரப்புக்குமிடையே நடைபெறும் வர்த்தகப் பேச்சு ஆக்ககரமாய் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். உடன்படிக்கை ஏற்படாவிட்டால், அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து கூடுதல் வரி விதிக்கப்படும் என்று முன்னர் அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது.

அதற்குள் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நோக்கில் சென்ற வார இறுதியிலும் வர்த்தகப் பேச்சுகள் தொடர்ந்தன. அமெரிக்காவும் சீனாவும் ஒன்றுக்கொன்று பதிலடி கொடுக்கும் விதமாக அறிவித்திருந்த வரி உயர்வால், சென்ற ஆண்டிலிருந்தே உலக அளவில் நிதிச் சந்தை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த புதிய பேச்சு, சீன அரசாங்க நிறுவனங்கள், பெய்ஜிங்கின் நாணய மதிப்பு போன்ற கடினமான விவகாரங்கள் தொடர்பில் அமைந்திருந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை