சர்வதேச கிரிக்கெட் நடுவரான குமார் தர்மசேனவுக்கு வருடத்தின் சிறந்த நடுவர் விருது

சர்வதேச கிரிக்கெட் நடுவரான குமார் தர்மசேன தனது தாய்நாட்டுக்கும் அவர் படித்த பாடசாலையான நாலந்தா கல்லூரிக்கும் ஒப்சேர்வரின் வருடத்தின் சிறந்த பாடசாலை விருதுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் நடுவருக்கான டேவிட் செப்பர்ட் விருதை இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இந்தப் பெருமையை தனது நாட்டுக்கும் படித்த பாடசாலைக்கும் அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் த​ைலவர்களும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டித் தீர்ப்பாளர்களும் இணைந்து கடந்த வாரம் குமார் தர்மசேனவை வருடத்தின் சிறந்த நடுவராகத் தெரிவு செய்தனர்.

“இந்த விருதுக்கு நான் பெயரிடப்பட்ட ஆறு வருடங்கள் கழிந்த பின்னரே இவ் வெற்றி எனக்கு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து எனது நடுவர் கடமையை மேற்கொள்ள இது என்னை பெரிதும் ஊக்குவிக்கும். இந்த வருடம் எனக்கு திருப்தியான வருடமாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் இந்த விருது எனக்கு பெரும் கௌரவமாக உள்ளது” என்று விருது வென்ற பின்னர் குமார் தர்மசேன கூறினார்.

“நான் எப்போதுமே கிரிக்கெட் விளையாட்டை விரும்பி வந்திருக்கின்றேன். ஒரு விளையாட்டு வீரனாகவும் ஒரு நடுவராகவும் அதனை நான் விரும்பியிருக்கின்றேன். எனது பிள்ளைகள் எனக்கு வழங்கிய ஆதரவுக்கும் புரிந்துணர்வுக்கும் அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எனது பயிற்சியாளரான பீட்டர் மனுவேல் (இவர் ஒரு முன்னாள் நடுவர்) லுக்கு நன்றிகள். இந்த சிறப்பான விளையாட்டு சவால் மிக்கது. அந்த சவால்களை எதிர்கொள்ள நான் மேலும் உழைக்க வேண்டும்’ என்று கூறுகிறார் 47 வயதான குமார்தர்மசேன.

1989 இல் குமார் தர்மசேன ஒப்சேர்வரின் வருடாந்த கிரி்க்கெட் வீரர் விருதை வென்றவர். சர்வதேச அரங்கில் சிறப்பாக சேவையாற்ற தேவையான உந்து சக்தியை இந்த விருது தனக்கு வழங்கியதாக அவர் கூறுகிறார்.

ஒரு கிரிக்கெட் வீரர் என்ற ரீதியில் இந்த விருதை நான் வென்றது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாகும். அந்த விருது வழங்கிய ஊக்கமே என்னை இலங்கை அணிக்காக விளையாடச் செய்தது.

இவ்வாறான பாரிய விருதை வெல்வது பாடசாலை கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதை சரிவர பின்பற்றினால் நல்ல இடத்துக்கு செல்ல முடியும் என்று குமார் தர்மசேன அண்மையில் வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

“சிறப்பான திறமையும் உடனடி தீர்மானம் எடுக்கும் தன்மையும் கொண்ட வீரர்கள் பலர் எங்கள் காலத்தில் இருந்தனர். அவர்களுடன் ஒப்படுகையில் அவ்வாறான வீரர்கள் இப்போது குறைவாகவே உள்ளனர். மேற்கூறிய திறமையுள்ள வீரர்கள் இலகுவாக தேசிய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஆனால் அவ்வாறு இடம் பிடிக்கக் கூடிய திறமையுள்ள பாடசாலை வீரர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்” என்று அவர் கூறினார்.

1996 இல் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் உலக கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் குமார்தர்மசேனவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2006 நவம்பரில் குமார் தர்மசேன சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து விலகி நடுவர் துறையில் ஈடுபட்டார். 2009 இல் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியொன்றில் நடுவராக பணியாற்றினார்.

இரண்டு வருடங்களின் பின் இந்தியாவில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பித்த போது 18 நடுவர்கள் கொண்ட குழுவில் இவரும் இடம்பிடித்தார். அதே ஆண்டில் (2011) அவர் உயர் நிலை நடுவராக தரம் உயர்த்தப்பட்டார்.

தற்போதைய பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் இப்போது முன்னரைப் போலன்றி பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பாடசாலை கல்வி முடியும் போது ஒருசில வீரர்கள் மட்டுமே முன்னேறும் திறமையுடன் உள்ளனர்.

“நான் நாலந்தா கல்லூரியில் இருந்து விலகிய போது எனக்கு ஹற்றன் நெஷனல் வங்கி வேலை வழங்கியது எனக்கு மிகுந்த அதிர்ஷ்டமாகப்பட்டது. அத்துடன் ஒரு கழக கிரிக்கெட் வீரருக்கான அனைத்து ஆதரவையும் அவர்கள் வழங்கினர். நான் சர்வதேச கிரிக்கெட் வீரரான போதும் கூட அந்த ஆதரவு தொடர்ந்தது. ஆனால் தற்போதைய பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வாறான ஆதரவு கிடைப்பது மிகவும் அபூர்வமாகும்” என்று குமார் தர்மசேன கூறுகிறார்.

1971 ஏப்ரல் 24ம் தகதி கொழும்பில் பிறந்த குமார் தர்மசேன நாலந்தா கல்லூரியின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான தர்மசேன மூன்று வருடங்களாக அக்கல்லூரியின் முதலாவது அணியில் விளையாடி வந்தார்.

1988 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை மயிரிழையில் தவறவிட்டார். அம்முறை ஆனந்த கல்லூரியின் சஞ்சீவ ரணதுங்க விருதை வெற்றி கொண்டார். எனினும் அதற்கு அடுத்த பருவத்திலும் சிறப்பாக விளையாடிய குமார் தர்மசேன ஒப்சேர்வர் வருடாந்த கிரிக்கெட் வீரர் விருதை தனதாக்கிக் கொண்டார். அதற்கு அடுத்த வருடம் மாவன் அத்தபத்து விருதை வென்றபோது குமார் தர்மசேன இரண்டாவது இடத்தில் இருந்தார்.

அதன்பின் குமார் தர்மசேன புளூம்பீல்ட் கழகத்துக்காக கிரிக்கெட் விளையாட்டைத் தொடர்ந்தார்.

ஒப்சேர்வர் சிறந்த வருடாந்த வீரர் விருதை வென்ற மூன்று வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்காக அறிமுகம் பெற்றார் 1993 இல் எஸ். எஸ். சி மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அவரது அறிமுகப் போட்டி இடம்பெற்றது.

1994 ஆகஸ்ட் 24ம் திகதி அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிராக பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற அப்போட்டியில் அவர் 9 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய குமார் தர்மசேன 868 ஓட்டங்கள் பெற்றார். அதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். பந்து வீச்சில் 69 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். 72 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு பெறுதியாகும். 141 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 அரைச்சதங்கள் உள்ளிட்ட 1222 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அவர் 138 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது ஓப் ஸ்பின் பந்து வீச்சு பல தருணங்களில் இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

ஒரு அணி வீரராக செயற்பட்டதே அவரது சிறப்பம்சமாக இருந்தது. அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது அதனைக் காப்பாற்றும் வகையில் அவரது ஆட்டம் இடம்பெறும். ‘உனந்துவா’ (அக்கறை காட்டுபவன்) என்ற பட்டப் பெயர் அவருக்கு இருந்தது.

அர்ப்பணிப்புடனும் மகிழ்ச்சியாக விளையாடினால் நீங்கள் வெற்றிபெற முடியும் என்பதே அவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு குமார் தர்மசேன வழங்கும் அறிவுரையாக அமைகிறது.

2015 உலகக் கிண்ண சுற்றுப் போட்டிக்கு நடுவராக சர்வதேச கிரிக்கெட் பேரவை இவரை தெரிவு செய்த நிலையில் 2015 உலக கிண்ண இறுதிப்போட்டியில் இவர் நடுவராகப் பணிபுரிய நேர்ந்தது. அப்போது உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியதுடன் இறுதிப் போட்டியில் நடுவராகவும் பணி புரிந்த முதலாவது வீரர் என்ற பெருமையை குமார் தர்மசேன பெற்றார்.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் 2019க்கான வீரர்களுக்கு வாக்களிக்கும் கூப்பன்கள் ஒப்சேர்வர், டெய்லி நியூஸ், தினமின மற்றும் தினகரன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இவற்றை பூர்த்தி செய்து அனுப்புவதன் மூலம் தமது அபிமான வீரர்களுக்கு வாக்களிப்பதுடன் அதிர்ஷ்ட சீட்டின் மூலம் நீங்களும் பரிசுகளை வெல்லலாம்.

Sat, 02/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை