அமெரிக்க, வடகொரியத் தலைவர்கள் மீண்டும் சந்திக்கத் திட்டம்

அமெரிக்கா மற்றும் வடகொரியத் தலைவர்கள் மீண்டும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக  வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு, வியட்நாமின் கரையோர நகரான டா நாங்கில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பு இரண்டாம் கட்டச் சந்திப்பென்பதுடன், இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அணுசக்தி சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கான முன்னணி பேச்சாளர் கிம் ஜொங் சோல்லுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் வடகொரியத் தலைவர்களுக்கிடையில் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறுமென்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. 

வடகொரியா அணுவாயுதச் சோதனைகளை நடத்தியிருந்த நிலையில், ஆத்திரமடைந்த அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் குழப்பான நிலைமை நீடித்துவந்தது. இருப்பினும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வடகொரியாவுக்கு  ஏனைய நாடுகள் அழுத்தம் பிரயோகித்துவந்த நிலையில், கடந்த வருடம் ஜுன் மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க மற்றும் வடகொரியா தலைர்வளுக்கிடையிலான முதலாவது சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/01/2019 - 16:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை