திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பரிந்துரை அறிக்கை கையளிப்பு

திடீர் மரணங்களின்போது திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைய வேண்டிய விதம் மற்றும் அதற்காகச் சட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு அதன் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்தது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி சிரேஷ்ட பேராசிரியர் ரவீந்திர பிரணாந்து தலைமையிலான 12 பேரடங்கிய குழு திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வந்தது. இந்த ஆய்வின் அடிப்படையிலேயே பரிந்துரைகள் அடங்கிய இவ்வறிக்கை நீதி அமைச்சர்  தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் காலத்துக்கேற்ற வகையில் மரண விசாரணை அதிகாரிகளுக்கான பரிந்துரைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் காலங்களின்போது அப்பரிந்துரைகளை பின்பற்றியே விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

Thu, 02/14/2019 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை