இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பு

இஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக வலுவான போட்டியாளர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சிக்கு கடும் போட்டியாக கருதப்படுகிறது.

இதில் முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸின் ரிசைலன்ஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் யாயிர் லபிட்ஸின் யெஷ் அடிட் பிரிவுக்கு இடையிலேயே மையவாத கூட்டணி ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகிப்பதற்கு உடன்பட்டுள்ளனர்.

120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்திற்கு கட்சி அடிப்படையில் இஸ்ரேலிய வாக்காளர்கள் உறுப்பினர்களை தேர்வு செய்யவுள்ளனர். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 1948 தொடக்கம் அங்கு ஒற்றை கட்சி ஆட்சி அமைத்ததில்லை.

69 வயதான நெதன்யாகு கடந்த ஒரு தாசப்தமாக இஸ்ரேல் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். எனினும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரது அரசியலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை