கிழக்கு ஜெரூசலத்தில் 4,461 யூத குடியேற்றத்திக்கு ஒப்புதல்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் ஆயிரக்கணக்கான யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நகரில் உள்ள கிலோ குடியேற்றத்தில் 464 அலகுகள், கிர்யாத் யியோவில் குடியேற்றத்தில் 480 அலகுகள் உட்பட மொத்த 4,461 அலகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் ‘இஸ்ராயேல் ஹயூம்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குடியேற்றங்களில் வடக்கு ஜெரூசலத்தில் அரபு பிரதேசங்களான ஷுபாத் மற்றும் பெயித் ஹனினாவுக்கு அருகில் புதிய வீட்டுத் திட்டங்களை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலால் 1967 யுத்தத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் தற்போது 100க்கும் அதிகமான குடியேற்றங்களில் சுமார் 650,000 இஸ்ரேலிய யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இரு பலஸ்தீன பகுதிகள் மற்றும் காசாவை உள்ளடக்கிய எதிர்கால நாடு ஒன்றை பலஸ்தீனர்கள் கோருகின்றனர். மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமிப்பு பகுதி என சர்வதேசம் கருதுகிறது.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை