சாய்ந்தமருது ப்லாஸ்டர் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுகம்

சாய்ந்தமருது ப்லாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் வீரர்களுக்கான சீருடை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது சீபிரீஸ் ரெஸ்டில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவரும் உஸ்மான் கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏ.எல்.முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் அவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கழக சீருடையினை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம். பஸ்மீர், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜஃபர், சாய்ந்தமருது லீடர் எம் எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம்.ஏ.நிசார், கழகத்தின் செயலாளரும், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் எம்.நிசார், பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கல்முனை கிளையின் பிரதித் தலைவர் ஏ.எம்.றியாத், நியூ லங்கா பாத்திமா அரிசி ஆலை உரிமையாளர் ஏ.ஜஃபர், தொழிலதிபர் எம்.எச்.நாசர் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச கழகங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கழகத்தில் இணைத்து கொண்ட கழக உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அட்டைகளும் நிகழ்வின் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

(சாய்ந்தமருது தினகரன் நிருபர்)

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை