28ஆவது வர்த்தக கூடைப்பந்தாட்ட சம்பியன்சிப்: செலான் வங்கி வெற்றி

28 ஆவது வர்த்தக கூடைப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டிகளின் பெண்கள் ஏ பிரிவின் 2 ஆம் நிலை போட்டிகளில் செலான் வங்கியின் மகளிர் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த போட்டிகள் கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்றன.

இலங்கை மேர்கன்டைல் அசோசியேஷனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளின் இறுதிப் போட்டியில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் அணியுடன், செலான் வங்கி அணி மோதியிருந்தது. இதில் செலான் வங்கி அணி 51 – 24 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தது.

ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மொத்தமாக ஐம்பத்து இரண்டுஇந்த போட்டிகளில் மோதியிருந்ததுடன்,வர்த்தக கூடைப்பந்தாட்ட போட்டிகள் வரலாற்றில் அதிகளவு அணிகள் பங்கேற்ற முதல் தடவை இதுவாக அமைந்திருந்தது. மொத்தமாக 123 போட்டிகள் இடம்பெற்றன.

இந்த வெற்றி தொடர்பாக அணியின் தலைவி அமாயா கல்பனி கருத்துத் தெரிவிக்கையில்,'அணியின் சிறந்த முயற்சியால் இந்த வெற்றியை பெற முடிந்தது. அணித் தலைவி எனும் வகையில், எமது அணியினரின் செயற்பாடுகள் குறித்து மிகவும் பெருமையடைகிறேன்.

எமது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு போன்றவற்றுக்கு கிடைத்த வெகுமதியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. செலான் வங்கி எமக்கு நெகிழ்ச்சியத்தன்மையையும், நம்பிக்கையையும் வழங்கி ஊக்குவித்திருந்தது. எனவே, எம்மால் இந்த வெற்றியை அனுபவிக்கக்கூடியதாக இருந்தது.' என்றார்.

பெறுமதி வாய்ந்த வீரருக்கான விருதை பெனிகா தலகல பெற்றுக் கொண்டதுடன், இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை குஞ்சனா விஜேசிறிவர்தன பெற்றுக் கொண்டார். செலான் வங்கியின் பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியில் அமாயா கல்பனி (தலைவி), ஜயலிய குமாரி, பெனிகா தலகல, கயா ஜயவீர, தர்ஜினி சிவலிங்கம், குஞ்சனா விஜேசிறிவர்தன, நெத்மி ஹேரத், கமலினி மில்ஸ், கிரேஷானி ​பெர்னாண்டோ, பிரபாஷி மஹாவத்த ஆகியோர் அடங்கியுள்ளனர்.

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை