தென்ஆபிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 154 ஓட்டங்களுக்குள் சுருண்டது

தென்ஆபிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை முதல் இன்னிங்சில் 154 ஓட்டங்களில் சுருண்டது.

தென்ஆபிரிக்கா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற தென்ஆபிரிக்கா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ஓட்டங்களும், விக்கெட் காப்பாளர் டி காக் 86 ஓட்டங்களும் பெற்றனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க தென்ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் 222 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜித தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்தது. திரிமான்ன 25 ஓட்டங்களுடனும், ரஜித ஓட்டம் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஜித 1 ஓட்டம் எடுத்த நிலையிலும், திரிமான்ன 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். விக்கெட் காப்பளர் டிக்வெல்ல தாக்குப்பிடித்து 42 ஓட்டங்கள் அடிக்க இலங்கை அணி 37.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 154 ஓட்டங்களுக்குள் சுருண்டது. ரபாடா 4 விக்கெட்டும், ஒலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்ஆபிரிக்கா முதல் இன்னிங்சில் 68 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அத்துடன் 2-வது நாள் உணவு இடைவேளை வரையான தகவலே இவை.

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை