மிளகு விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பாதிப்பு

மிளகுக்கான நிர்ணய விலையை வழங்க அரசாங்கம் உறுதியளித்து ஒரு வருட காலமாகியும் இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லையெனவும் இதனால் மிளகு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மிளகு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

அரசாங்கம் தமது கோரிக்கைக்கு மதிப்பளித்து தீர்வொன்றைப் பெற்றுத்தராதவிடத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

நேற்றைய தினம் பதுளை மாவட்டத்தில் மிளகுச் செய்கையாளர்கள் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். பதுளை மாவட்ட மிளகுச் செய்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்பின் மூலம் இந்த பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இதன்போது அரசாங்கம் மிளகு பயிர்ச்செய்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் மிளகுச் செய்கையாளர்கள் 2700 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கமானது நட்டத்தை ஈடுசெய்வதற்காக 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தபோதும் இதுவரை அந்த நிதி மிளகு செய்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

Tue, 02/19/2019 - 14:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை