மியன்மாரில் அபின் வளர்ப்பை கைவிட விவசாயிகள் மறுப்பு

மியன்மாரின் மலைப் பகுதிகளில் அபின் செடி பயிரிடுவதை நிறுத்த, விவசாயிகள் தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.

அரசாங்கத் தரப்பிலிருந்து அபின் செடி வளர்ப்பைக் கைவிட கணிசமான மானியம் வழங்கப்பட்டாலும், விவசாயிகள் அதைக் கைவிடுவதாக இல்லை.

ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, அபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது மியன்மாரிலாகும். அபின் செடியில் பூக்கும் புூக்களில் இருந்து கீறி எடுக்கப்படும் பிசின், பல்வேறு போதைப் பொருட்களுக்கான மூலப்பொருளாக உள்ளது.

அந்தப் பிசின் நிறைந்த ஒரு குவளையை அவர்கள் 100 டொலருக்கு சந்தையில் விற்க முடிகிறது.

போதைப்பொருள் உற்பத்திக்கு எதிராகப் பற்பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அபின் செடி வளர்ப்பில் கிடைக்கும் இலாபம் வேறு எதிலும் கிடைக்காததால், விவசாயிகள் அதைக் கைவிடுவதில்லை.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை