பெல்ஜியத்தில் சாக்கடை வழியாக வங்கிக்கொள்ளை

பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப்பின் வைர வர்த்தக மாவட்டத்தில் பாதாள சாக்கடை வழியாக சுரங்கம் அமைத்து வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கொள்ளை நடந்திருப்பதற்கான சாத்தியம் அறிந்து கடந்த ஞாயிற்றுகிழமை பொலிஸார் வங்கிக்குச் சென்றபோது வங்கியின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தபோதும் அதினுள்ளே இருந்த 30 வைப்புப் பெட்டிகள் காலியாக இருந்தன.

பாதாள சாக்கடை குழாய்களின் அகலம் 40 செ.மீ மாத்திரமாகும். கொள்ளையர்கள் அந்த குறுகிய குழாய் வழியாக நெருக்கிக்கொண்டு சென்று இன்னொரு சுரங்கம் தோண்டி வங்கியை அடைந்துள்ளனர்.

வங்கியில் எவ்வளவு பணம் திருடுபோனது என்பதைப் பற்றி பொலிஸார் இன்னமும் அறிவிக்கவில்லை.

கொள்ளையர்கள் மிகவும் ஆபத்தான முறையை பின்பற்றி இருப்பதாகவும், அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1976 ஆம் ஆண்டு பிரான்ஸின் நீஸ் நகரில் இதே போன்ற திருட்டுச் சம்பவம் நடந்தது. அதில் மில்லியன்கணக்கான டாலர் கொள்ளையடிக்கப்பட்டது.

வங்கியிடம் இருந்து சரியான தகவல் கிடைக்காததால் வங்கி பயனாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். சிலர் தங்களது வைப்புப் பெட்டகத்தில் தங்களது வாழ்நாள் சேமிப்புகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை