வெப்பமாதலால் உருகும் இமயமலை பனிப்பாறை

உலகில் வெளியிடப்பட்டுவரும் வெப்பவாயுக்களின் அளவு குறைக்கப்படா விட்டால் இமய மலையிலுள்ள பனிப் பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு 2100ஆம் ஆண்டிற்குள் உருகி விடுமென ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் அதிகரித்துவரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முயலும் பாரிஸ் உடன்பாடு நிறைவேற்றப்பட்டாலும் கூட மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறை உருகிவிடுமென அவர்கள் கூறினர்.

ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

உலக வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துவது பாரிஸ் உடன்பாட்டின் இலக்காகும்.

பனிப்பாறைகள் மிதமிஞ்சி உருகினால், பனி ஏரிகள் உடைந்து மலைப் பகுதிகளுக்குக் கீழுள்ள நிலப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் பெருவெள்ளம் ஏற்படக்கூடும்.

இமயமலையைச் சுற்றிய பகுதிகளிலுள்ள 250 மில்லியன் மக்களுக்குத் தேவையான தண்ணீரை, இமயமலைப் பனிப் பாறைகளே வழங்கி வருகின்றன.

அவர்கள் தவிர, இமயத்திலிருந்து உற்பத்தியாகும் நதிகளை நம்பி 1.65 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கங்கை, யமுனை, மெக்கோங் உள்ளிட்ட உலகின் 10 முக்கிய நதிகள் இமயத்திலிருந்தே உற்பத்தியாகின்றன.

இதனால் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மார், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3500 கி.மீ பகுதி கேள்விக்குறியாகும் பிராந்தியமாக இது உள்ளது.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை