தெங்கு ஏற்றுமதியால் ரூ.95மில். வருமானம்

தேங்காய் ஏற்றுமதி மூலம் கடந்த வருடத்தில் 95மில்லியனை வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் 2022ஆம் வருடத்திற்குள் இந்த வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உதய ரூபசிங்க தெரிவித்துள்ளார்.   2014ஆம் ஆண்டு தெங்கு பொருட்கள் ஏற்றுமதிக்கான வருமானம் 73பில்லியனாகவும் அது 2018ஆம் ஆண்டில் 22பில்லியனால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

2017மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நாட்டில் தேங்காய் உற்பத்தி மிகக் குறைந்து காணப்பட்டது எனினும் தெங்கு உற்பத்திப் பொருட்களின் நிலை உயர்வடைந்ததாகவும் தெரிவித்த அவர், இக்காலகட்டங்களில் தெங்கு உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு தும்பு உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியினால் 4 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் 2018 ஆம் ஆண்டில் அது 10 பில்லியனாக உயர்வடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)    

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 02/19/2019 - 15:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை