இலங்கையிலிருந்து 8 வீரர்களுக்கு வாய்ப்பு; மாகாண மட்ட தெரிவுப் போட்டிகள் மார்ச்சில்

சீனாவில் நடைபெறவுள்ளஅங்குரார்ப் பண மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 12 வயதுக்குட்பட்டோருக்கானஅகில இலங்கை பாடசாலைகள் மைலோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உலக கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடனும்,உலகின் பிரபல கால்பந்து கழகங்களில் ஒன்றான பார்சிலோன கால்பந்து கழகத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடருக்கு கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் ஆகியபூரண பங்களிப்பு வழங்கவுள்ளன.

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையில் இவ்வருடமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மைலோ சம்பியன் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்,அதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற 8 வீரர்களுக்கு சீனாவில் நடைபெறவுள்ள மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரிய வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பிறந்த மாணவர்களுக்கு மாத்திரம் நடத்தப்படுகின்ற இப்போட்டித் தொடரில் 9 மாகாணங்களையும் சேர்ந்த 822 ஆடவர் அணிகளும், 265 மகளிர் அணிகளும் உள்ளடங்கலாக சுமார் 13 ஆயிரம் வீர,வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன்,மேல் மாகாணத்துக்கான போட்டிகள் மாத்திரம் மூன்று வலயங்களாக நடைபெறவுள்ள அதேநேரம், இதன் முதலாவது போட்டிஎதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதியாழ். புனித ஹென்ரியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் போட்டிஎதிர்வரும் மேமாதம் 4ஆம், 5ஆம் திகதிகளில் மாத்தறை கால்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் திறமைகளைவெளிப்படுத்துகின்றவீரர்களில் 8 பேர் மாத்திரம் இந்நாட்டிலுள்ள சிரேஷட பயிற்விப்பாளர்களைக் கொண்ட குழாத்தினால் அன்றையதினம் நடத்தப்படுகின்றவிசேடபயிற்சிமுகாம் மூலம் இலங்கை கால்பந்து அணிக்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

உலகின் பிரபல கால்பந்து கழகங்களில் ஒன்றாக பார்சிலோனா கால்பந்து கழகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்ற மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா,மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, பாகிஸ்தான், கொலம்பியா,சிலி, ஜமைக்கா, ட்ரினிடாட் அன்ட் டொபேகோ ஆகியநாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளன. அத்துடன், அணிக்கு 5 பேர் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒருபெண் வீராங்கனையும் இடம்பெறல் வேண்டும்.

இலங்கையில் நடைபெறவுள்ள 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மைலோ சம்பியன் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் குறித்து தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (11) கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நெஸ்லே லங்கா நிறுவத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ப்ரெப்ரிஸ் கெவலின்,மைலோ விநியோக முகாமையாளர் மொஹமட் அலீ,பிரதித் தலைவர் பந்துல எகொடகே உள்ளிட்டோரும்,கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவின் ஆலோசகர் சுனில் ஜயவீர, இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஹேமன்த அபேகோன்,கல்வி அமைச்சின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பிரதிப் பணிப்பாளர் அதுல விஜேவர்தன மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் செயலாளர் நாலக திசாநாயக்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பீ.எப் மொஹமட்

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை