கட்டாரின் தேசிய விளையாட்டு தினம்

கொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் கட்டாரின் தேசிய விளையாட்டு தினமான கடந்த (12) கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடியது.

இந் நிகழ்வுகள் இலங்கைக்கான கட்டார் தூதுவர் கலாநிதி ரசீட் அல் பஹ்டி அல் மெஹ்ரி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்தில் பணியாற்றும் சகல ஊழியர்கள் பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டனா். அத்துடன் இப் போட்டிகளில் குவைத், ஓமான், பலஸ்தீன் நாடுகளது இலங்கைக்கான தூதுவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2011ஆம் ஆண்டு கட்டாரின் இராஜ தலைவர் ஒவ்வொரு வருடம் பெப்ரவரி இரண்டாம் செவ்வாய்க்கிழமையை கட்டார் தேசிய விளையாட்டு நாளாக பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தினம் கட்டாரும் மற்றும் சகல கட்டார் தூதரகங்களும் விளையாட்டு தினத்தினை கொண்டாடியது. உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்களில் ஊழியர்கள் ஈடுபடுவதை காணலாம்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை