அவுஸ்திரேலியா 4/384 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று கன்பராவின் மனுக்கா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் ஜோ பேர்ன்ஸ் மற்றும் ரவிஸ் ஹெட்டின் அபார சத்தின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி அணி 4 விக்கெட் இழப்புக்கு 384 என்ற இமாலய ஓட்டங்கள் பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸி அணியின் தலைவர் ரிம் பெய்ன் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.அதற்கு அமைவாக அந்த அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஜோ பேர்ன்ஸ் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர் இருவரும் நன்றாக ஆடிய நிலையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஹாரிஸ் 11 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் விஷ்வ பெர்ணான்டோவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ பேர்ன்ஸுடன் இணைந்தார் உஸ்மான் கவாஜா அவரும் வந்த வேகத்திற்கு ஓட்டம் எதுவும் பெறாமல் விஷ்வா பெர்ணான்டோவின் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஜோ பேர்ன்ஸுடன் இணைந்தார் லபுசேன்ஸ் அவரும் இந்த போட்டியில் தனது கன்னி டெஸ்ட் வரம் பெற்ற சாமிக்க கருணாரத்னவின் பந்தில் ஆறு ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஆஸி அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்து பரிதவித்த நிலையில் ரவிஸ் ஹெட் பேர்ன்ஸுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கான 308 ஓட்டங்களை குவித்தனர்.ரவிஸ் தனது சொந்த மண்ணில் 161 ஓட்டங்கள் பெற்று தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்றமை விசேட அம்சமாகும்.2017 ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டிவ் ஸ்மித் மற்றும் மிட்ச் மார்ஷ் ஆகியோர் 200 ஓட்டங்கள் 4 ஆவது விக்கெட்டுக்காக பெற்றிருந்ததே கூடுதலான இணைப்பாட்ட ஓட்டமாக இருந்தது.

இந்த மைதானம் துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானம் என்பதால் அதனை ஆஸி வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த மைதானத்தில் இடம்பெறும் கன்னி டெஸ்ட் போட்டியாகும்.

ஆஸி அணியின் போர்ன்ஸ் 172 ஓட்டங்களுடனும் குர்டிஸ் பட்டர்சன் 25 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.ஆனால் பட்டர்சன் தனது முதல் பந்தில் ஆட்டமிழக்க வேண்டியவர் இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பின் காரணமாக மற்றொரு விக்கெட் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது.

பந்து வீச்சில் விஷ்வா பெர்ணான்டோ 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

காலை நேரத்தில் குளிர் காலநிலை என்பதால் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தமை விசேட அம்சமாகும்.அவ்வணி 3 விக்கெட்டை 28 ஓட்டங்களை பெற்றிருந்தது.

காலை வேளை மெல்லிய காற்று வீசியதால் புதிய பந்து என்ற படியால் இலங்கை அணி பந்து வீச்சில் அசத்தினர்.ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பேர்ன்ஸ் 34 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

ஆனால் இந்த சதத்துடன் அவரது சதம் 4 ஆக உயர்ந்தது.அவர் 147 பந்துகளை எதிர்கொண்டே சதம் குவித்தார்.போர்ன்ஸ் 2016 ம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 170 ஓட்டங்கள் பெற்றதே அதிக ஓட்டமாகும்.அதனை இந்த ஆட்டத்தில் 172 ஓட்டங்கள் பெற்று களத்தில் உள்ளார்.அவுஸ்திரேலிய வீர்ர்கள் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் பெற்ற முதல் சதம் என்பது குறிப்பிடத்தகது.கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டுபாயில் நடந்த டெஸ்ட் போட்டியில் கவாஜா 141 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

அத்துடன் அணியின் உப தலைவர் ஹெட் 155 பந்து களை எதிர் கொண்டு தனது கன்னி டெஸ்ட் சதத்தை பெற்றார்.இது வரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.அவர் 87 ஓட்டங்கள் பெற்ற போது டில்ருவன் பெரேரா பிடியை தவற விட்டார்.

அத்துடன் இந்த வருடத்தின் இறுதி பகுதியில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்த மைதானத்தில் மோதவுள்ளது.

இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

காயம் காரணமாக சமீர,லஹிரு குமார ஆகியோர் களமிறங்கவில்லை அவர்களின் இடத்துக்கு கசுன் ராஜித,விஷ்வா பெர்ணான்டோ அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.பெரிதும் எதிர்பாக்கப்பட்ட சுரங்க லக்மால் இறுதி நேரத்தில் காயம் காரணமாக போட்டியில் கலந்து கொள்ளவில்லை அவருக்கு பதிலாக கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் கருணாரத்ன.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

பரீத் ஏ றகுமான்

Sat, 02/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை