இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 2–0 என தொடரை கைப்பற்றியது.  

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் நோர்த் சவுண்ட் (ஆன்டிகுவா) நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 187, மேற்கிந்திய தீவுகள் 306ஓட்டங்கள் எடுத்தன. பின், 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மேற்கிந்திய அணியின் பந்துவீச்சில் மீண்டும் திணறியது. ஹோல்டர் வேகத்தில் ரோரி பர்ன்ஸ் (16), ஜோனி பேர்ஸ்டோவ் (14), ஜோஸ் பட்லர் (24) வெளியேறினர்.  

ஜோசப் பந்தில் ஜோ  டென்லி (17), அணித்தலைவர் ஜோ ரூட் (7) ஆட்டமிழந்தனர். கீமர் ரோச் வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் (11), மொயீன் அலி (4), பென் போக்ஸ் (13), ஸ்டூவர்ட் பிரோட் (0) அரங்கு திரும்பினர். ஹோல்டர் பந்தில் ஜேம்ஸ் அண்டர்சன் டக்–அவுட் ஆனார்.  

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 132ஓட்டங்களுக்கு சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரோச், ஹோல்டர் தலா 4, ஜோசப் 2விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  

இதனைத் தொடர்ந்து 14 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.   இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2–0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது. மூன்றாவது டெஸ்ட் வரும் பெப்ரவரி 9இல் கிராஸ் ஐஸ்லட் நகரில் ஆரம்பமாகவுள்ளது.    

Mon, 02/04/2019 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை