மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு

RSM
மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு-Prevailing Showery Condition Continues

பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை எதிர்பார்ப்பு

நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

Mon, 02/04/2019 - 13:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை