2ஆவது Sri Lanka IRONMAN 70.3 Colombo: விளையாட்டு நிகழ்விற்கு உலகை வரவேற்க ஆயத்தம்

மிகப் பாரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வான So Sri Lanka IRONMAN 70.3 Colombo 24 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது தடவையாகவும் இடம்பெறுகின்ற இந்நிகழ்வானது நாட்டின் மீதான கவனத்தையும்,ஈடுபாட்டையும் அதிகரிக்கவுள்ளதுடன், இலங்கையில் இத்தகைய அளவிற்கு பிரமாண்டமான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதால் கிடைக்கும் மிகவும் முக்கியமான நன்மைகளில் சிலவாக அமைந்துள்ளன.

58 நாடுகளிலிருந்து 739 இற்கும் மேற்பட்ட தட கள வீரர்கள் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து கொழும்பிற்கு வரவுள்ள போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என மேலும் 899 பேர் அவர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்,So Sri Lanka IRONMAN 70.3Colombo கண்காட்சி நிகழ்வும் 2019 பெப்ரவரி 21 முதல் 24 வரை கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலின் லோட்டஸ் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விளையாட்டுக்கள், ஆரோக்கிய மற்றும் உடல்நலன் சார் உற்பத்திகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை IRONMAN 70.3 நிகழ்வில் பங்குபற்றவுள்ளவர்களுக்கும், பொது மக்களுக்கும் இக்கண்காட்சி வெளிக்காண்பிக்கவுள்ளது.

'கடந்த ஆண்டில் IRONMAN வர்த்தக உரிமையைஇலங்கைக்கு கொண்டு வந்து விளையாட்டு சுற்றுலாத்துறை மற்றும் வெளிப்புற பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு சிறந்த ஒரு நாடாக இலங்கையை நிலைநாட்டி, உடல்ரீதியாக சவால்விடும் செயற்பாடுகளில் இலங்கை மக்களும் அதிக எண்ணிக்கையில் பங்குபற்றுவதை ஊக்குவிப்பதே எமது இலக்குகளாக அமைந்தன.

கடந்த ஆண்டு நிகழ்வு எத்தகைய அளவில் சிறப்பான இடம்பெற்றது என்பதையிட்டு நாம் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்என பெரும் எண்ணிக்கையானவர்கள் இதில் பங்குபற்றியதுடன், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பலரும் சூரியக்குளியலுக்கு உகந்த எமது கடற்கரைப் பிரதேசங்களை அனுபவிப்பதற்கு முதற்தடவையாக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவது தடவையாக இந்த ஆண்டிலும் நிகழ்வை தொடர்ந்து நடாத்த வேண்டும் என்ற ஊக்குவிப்பையும், திடசங்கல்பத்தையும் அதுவே எமக்கு அளித்திருந்தது.

பங்குபற்றுகின்ற அனைவரும் மகத்தான அனுபவத்தைப் பெறும் வகையில் மூவகை விளையாட்டுகளையும் அனுபவிப்பதுடன், உண்மையான இலங்கை விருந்தோம்பலின் மகத்துவத்தை அனுபவித்து மகிழ்வதை உறுதி செய்யும் வகையில், எமது அணியானது அயராது உழைத்து வருகின்றது,' என்று Pro Am Serendib பணிப்பாளரான யசாஸ் ஹேவகே குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நிகழ்வில் பங்குபற்றியிருந்த வெளிநாட்டு தட கள வீரர்களில் பெரும்பாலானோர் தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தனர் என புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன. அவர்களில்70 வீதம் இற்கும் மேற்பட்டோர் போட்டி முடிவடைந்த பின்னர் நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்காக இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்தனர்.

50 வீதம் இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் போட்டியாளர்கள் மற்றும் அவருடன் கூட பயணித்தவர்கள் நான்கு அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்ததுடன், எஞ்சியோர் விருந்தினர் விடுதிகள் போன்ற பாரம்பரியம் அல்லாத தங்குமிடங்களை நாடியிருந்தனர். வெளிநாட்டு வீரர்கள் தாங்கள் தங்கியிருந்த காலப்பகுதியில் உணவு, தங்குமிடம், உள்நாட்டு பிரயாணம் மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவரும் சராசரியாக ரூபா 485,000 தொகையை செலவிட்டுள்ளனர்.

So Sri Lanka IRONMAN 70.3Colombo நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள வெளிநாட்டு மூவகை விளையாட்டுப் போட்டியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல் ஐந்து இடங்களுக்குள் முறையே இந்தியாவிலிருந்து 94 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 55 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 40 பேரும், பிரான்ஸிலிருந்து 34 பேரும், ஜப்பானிலிருந்து 24 பேரும் கலந்துகொள்ளவுள்ளனர். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஜேர்மனி, ரஷ்யா, மாலைதீவு மற்றும் இலங்கை போன்ற ஏனைய நாடுகளிலிருந்தும் மூவகை விளையாட்டுப் போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆண்டில் பங்குபற்றவுள்ள விளையாட்டுப் போட்டியாளர்களின் சராசரி வயது 38 ஆக காணப்படுவதுடன், ஆகக் கூடிய வயது 76 ஆகவும், ஆகக் குறைந்த வயது 18 ஆகவும் காணப்படுகின்றது.

போட்டியாளர்களில் பெரும்பான்மையானோர் ஆண்களாக காணப்படுவதுடன், விளையாட்டு வீரர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை 24வீதம் ஆக காணப்படுகின்றது. பெண்களும் விளையாட்டில் பங்குபற்றுவதை இந்த ஆண்டு IRONMAN ஊக்குவிப்பதுடன், முதல் 25 இடங்களைப் பெறுகின்ற இலங்கை பெண்களுக்கென பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெறவுள்ள 2019 IRONMAN 70.3 World Championship போட்டியில் பங்குபற்றுவதற்கு பிரத்தியேகமாக வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

'இலங்கை மக்கள் சோம்பலைப் போக்கி, வீடுகளுக்கு வெளியில் வந்து, தம்மை உடல்ரீதியான சவாலுக்கு உட்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என Pro Am Serendib விரும்புகின்றது. So Sri Lanka IRONMAN 70.3 Colombo மனவலிமையின் ஆற்றலைச் சோதிக்கின்ற நிகழ்வினை ஏற்பாடு செய்வது, சர்வதே மட்டத்தில் நாடு தொடர்பான விழிப்புணர்வை தோற்றுவிப்பது மட்டுமன்றி, எமது நாட்டு மக்களும் தமது திறமைகளை வெளிக்கொணர உதவி, உடல்ரீதியான செயற்பாடுகளின் சாதனையின் மூலமாகக் கிடைக்கின்றன. உண்மையான வெகுமதியை உணர்ந்து கொள்ளச் செய்கின்றது.

எதிர்கால நிகழ்வுகளில் பங்குபற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்ந்து,பெண்கள் அதிக எண்ணிக்கையில் மன வலிமையைச் சோதிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இன்று 21 ஆம் திகதி கிங்ஸ்பெரி ஹோட்டலில் பிரபலமான IRONMAN வீராங்கனையான ஜுலி மோஸூடன் 'உரையாடல்' நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்துள்ளோம்,' என Pro Am Serendib பணிப்பாளரான தேசபந்து ஜீலியன் போலிங் குறிப்பிட்டார்.

நிகழ்வின் ஆரம்பமாக,1.9 கிமீ ஒற்றைத்தடத்துடனான நீச்சல் போட்டியானது காலிமுகத்திடலை அண்டிய கடற்கரையில் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் அழகிய காட்சிகளை ரசித்தவாறே சம தரையில், வேகமான 90 கிமீ சைக்கிள் ஓட்டம் இடம்பெறவுள்ளதுடன், 21.1 கிமீ தூர மரதன் ஓட்டமும் இடம்பெற்று, காலிமுகத்திடலின் முகப்பில் நிறைவடையவுள்ளது. இந்த ஆண்டு சைக்கிளோட்டமானது ஜனாதிபதி மாவத்தை, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, யோர்க் வீதி மற்றும் இலங்கை வங்கி மாவத்தை ஆகிய வீதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. மரதன் ஓட்ட நிகழ்வானது பார்வையாளர்களுக்கு வசதியை அதிகரிப்பதற்காக கொள்ளுப்பிட்டி சந்தி வரை நீட்டிக்கப்படவுள்ளது.

போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி, பார்வையாளர்களுக்கு அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

'இத்தகைய அளவில் பிரமாண்டமான ஒரு நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறையிலிருந்து பெரும் எண்ணிக்கையான பங்காளர்களின் ஆதரவும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை