பயிற்றுவிப்பாளர்களால் பாடசாலை கிரிக்கெட் அழியும் நிலையில் – மார்வன்

இலங்கை உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் தொழில்நுட்ப ரீதியில் கிரிக்கெட் நுணுக்கங்களை சரிவர கடைப்பிடித்த ஒரு சில வீரர்களில் முன்னாள் இலங்கை தலைவர் மார்வன் அத்தபத்துவும் ஒருவர். சிதத் வெத்திமுனி, ரஞ்சன்மடுகல்ல, ரொஷான் மஹாநாம, ஹசான் திலகரட்ன ஆகியோர் வரிசையில் மார்வன் அத்தபத்துவும் சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வீரர்களின் வரிசையில் இடம்பிடிக்கிறார்.

ஆனந்த கல்லூரியின் தலைவராக இருக்கும்போதே இலங்கை அணிக்கு விளையாடிய பெருமை அர்ஜுன ரணதுங்கவை சேர்கிறது. இவர் 1980 இலும் அதன்பின்னர் 1982 இலும் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் என்ற விருதை வென்றார்.

அர்ஜுன விருதுகளை வென்ற நேரத்திலும் இலங்கை அணிக்காக விளையாடிய நேரத்திலும் மார்வன் அத்தபத்து ஆனந்த கல்லூரியின் கனிஷ்ட அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார்.

“1982 ஆம் ஆண்டு ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது வழங்கல் விழாவில் மேடையில் உருவாக்கப்பட்டிருந்த பெரிய கிரிக்கெட் பந்தில் இருந்து எங்கள் பாடசாலை கிரிக்கெட் தலைவர் அர்ஜுன வெளியே வருவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வாறு வந்துதான்அவர் தனக்கான விருதைவாங்கினார்” என்று தனது பழைய நினைவுகளை மார்வன் அத்தபத்து மீட்டிப்பார்க்கிறார்.

அந்த நிகழ்வு எனக்கு பெரிய ஊக்குவிப்பாக அமைந்தது. என்றாவது ஒருநாள் அந்த விருதை வெல்வதன் மூலம் நானும் எனது குடும்பத்தையும் எனது கல்லூரியையும் பெருமைப்படுத்தலாம் என்று எனக்குத் தோன்றியது. எனது எண்ணம் 8 வருடங்களின் பின்னர் நிறைவேறியது என்று மார்வன் அத்தபத்து கூறுகிறார்.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரருக்கான விருது கடந்த 40 ஆண்டு காலமாக நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரக் கணக்கான பாடசாலை வீரர்களின் உந்துசக்தியாக இருந்து வருகிறது. மார்வன் அத்தபத்துவின் பாடசலை கால சிறப்பான விளையாட்டு அவரை அந்த உயரத்துக்கு இட்டுச் சென்றது. 1990 இல் அவர் அந்த விருதை வென்றார். பிரபலமான அந்த விருதை வென்ற சில நாட்களில் அவர் இலங்கை தேசிய அணியில் விளையாடும் அந்த அபூர்வ சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது. 1990 நவம்பர் 23 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவரது டெஸ்ட் அறிமுகம் இடம்பெற்றது. அதற்கு ஒரு மாதத்தின்பின் அவரது ஒரு நாள் போட்டி அறிமுகம் இடம்பெற்றது. அதுவும் இந்தியாவுக்கு எதிராகவே இடம்பெற்றது. 1990 டிசம்பர் முதலாம் திகதி நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியிலேயே மார்வன் ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றார்.

பெரும்பாலான பாடசாலைகள் தமது கிரிக்கெட் அணிகளை பயிற்றுவிக்க இளம் பயிற்சியாளர்களை நியமிக்கின்றனர். ஆனால் தரமான வீரர்களை உருவாக்க அவர்கள் முயற்சிப்பதில்லை என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இலங்கை அணியும் முன்னாள் பயிற்சியாளருமான மார்வன் அத்தபத்து கூறுகிறார்.

ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதுகளை வென்ற அந்தக்கால வீரர்களில் கிட்டத்தட்ட அனைவரும் விரைவிலேயே தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றனர். ஆனால் இந்தக்கால பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கிடையிலான தேவையற்ற போட்டித் தன்மை பாடசாலை கிரிக்கெட்டின் தரத்தை பெருமளவில் குறைத்துள்ளது. ஒரு காலத்தில் எங்கள் பாடசாலை கிரிக்கெட் துறை உலகிலேயே மிகவும் சிறந்ததாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அதன் தரம் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

நம்பிக்கையுடன் கூடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய மார்வன் அத்தபத்து டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களைப் பெற்றார். இந்த சாதனையை கிரிக்கெட் பிதா மகனான டொன் பிராட்மன் (12) குமார் சங்கக்கார (11) பிரயன் லாரா (9) மஹேல ஜயவர்தன மற்றும் இங்கிலாந்தின் வொலி ஹமன்ட் தலா 7 எட்டியவர்களே மிஞ்சியுள்ளனர்.

விரேந்தர் செவாக், ஜாவித் மியன்டாட், ரிக்கி பொன்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் 6 இரட்டை சதங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றனர். ஆனால் அவர்கள் மார்வன் அத்தபத்துவைவிட அதிக போட்டிகளில் விளையாடியிருந்தனர்.

தேவையற்ற போட்டித்தன்மையை பயிற்சியாளர்கள், பாடசாலை அதிகாரிகள் மற்றும் பழைய மாணவர்கள் ஏற்படுத்தப்படுவதன் காரணமாகவே பாடசாலை கிரிக்கெட் துறை தற்போது தரமிழந்து உள்ளதாக மார்வன் அத்தபத்து கூறுகிறார்.

தமது பாடசாலையின் வீரர்கள் அனைத்து ரக கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று அவர்கள் வீரர்களை பிளவுபடுத்துகின்றனர். தரமான வீரர்களை உருவாக்குவது அவர்கள் நோக்கமல்ல. எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். அது பாடசாலை கிரிக்கெட்டின் தரத்தை பாதிக்கிறது.

எங்கள் காலத்தில் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க ஏராளமான ரசிகர்கள் மைதானங்களில் திரண்டனர். ஆனால் இப்போது பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்கள் குறைந்துள்ளனர். போட்டிகளில் தரம் வீழ்ச்சி அடைந்திருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் அத்தபத்து.

வீரர்களுக்கு சொல்லித்தரவேண்டும். ஆனால் இப்தேய பயிற்சியாளர்கள் தமது நோக்கங்களை வீரர்களுக்கு திணிக்க இப்போதைய பாடசாலை வீரர்களுக்கு அவர்களது பயிற்சியாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களால் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இரண்டு இன்னிங்ஸ் போட்டிகள். ஒரு நாள் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் என அனைத்திலுமே வெற்றிபெற வேண்டும் என்ற அதிக அழுத்தத்தை பாடசாலை வீரர்கள் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்று அத்தபத்து கூறுகிறார்.

90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்வன் அத்தபத்து மொத்தம் 5502 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 16 சதங்களும் 17 அரைச் சதங்களும் அடங்குகின்றன. 268 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 8529 ஓட்டங்களை அத்தபத்து பெற்றுள்ளார். இதில் 11 சதங்களும் 59 அரை சதங்களும் அடங்குகின்றன.

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை