குண்டுகள் வீச தயார்: அமெ. இராணுவத்தின் அறிவிப்புக்கு மன்னிப்பு

பெரிய குண்டுகளை வீச தயாராக இருப்பதாக தனது ட்வி ட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு அமெரிக்க இராணுவம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. 

அமெரிக்காவின் அணு சக்திய ஆயுதங்களை மேற்பார்வை இடும் மூலோபாய கட்டளையகம் வெளியிட்ட புத்தாண்டு செய்தியிலேயே இந்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவை வெளியிட்டது.  

இதில் “புத்தாண்டு மாலைப் பொழுதில் தேவைப்பட்டால் பெரிய பெரிய குண்டுகளை வீச தயாராக உள்ளோம்” என பதிவிட்டு அத்துடன் போர் விமானங்களிருந்து குண்டுகள் வெளியாகும் வீடியோ ஒன்றையும் இணைத்திருந்தது. அந்த வீடியோவில் பி 2 ரக குண்டுகள் தரையை நோக்கி பாய்வதை போல் காட்டப்பட்டிருந்தது. 

இந்த பதிவு இணையதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் ஒருவர், அணு ஆயுத போர் பற்றி அமெரிக்க இராணுவம் விளையாட்டாக பேசுவது ஏன் எனவும் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து அமெரிக்க இராணுவம் இந்தப் பதிவை அளித்துவிட்டு அதற்கு மன்னிப்பு கோரி மறுப்பதிவை வெளியிட்டது.  

அதனை தரக்குறைவான நகைச்சுவைப் பதிவு என்பதை ஒப்புக்கொண்ட இராணுவம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. 

அந்தப் பதிவு தனது விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அது குறிப்பிட்டது. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தான் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.   

Wed, 01/02/2019 - 12:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை