பற்றைக்காடுகளுக்கு தீ வைத்தல்: சிறுத்தைகளின் நடமாட்டமே காரணமாகும்

தோட்ட குடியிருப்புக்குள் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வட்டவளை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் பற்றைக்காடுகளுக்கும் புல்வெளிகளுக்கும் அண்மை காலங்களில் தீ வைக்கும் சம்பவங்களுக்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

மலையுச்சிகளில் காணப்படும் தோட்ட குடியிருப்புகளை அண்மித்து காணப்படும் பற்றைகாடுகளிலும் புல்வெளிகளிலும் சிறுத்தைகள் மறைந்து இருப்பதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். 

இதனால் தமது பாதுகாப்பு நலன் கருதி இவ்வாறான தீ வைக்கும் சம்பவங்கள் இப்பிரதேசங்களில் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. 

சிறுத்தைகளின் நடமாட்டமும் இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ளமையும் இதற்கு முதல் காரணமாகும். இரவு நேரங்களில் தாம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கவ்விச் செல்வதும், மலை பிரதேசங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை தாக்குவதும் அண்மைகாலத்தில் அதிகரித்துள்ளது.  

இதனால் மார்கழி மாதத்தில் ஏற்படும் வரட்சியை சாதகமாகப் பயன்படுத்தி தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது.இதனால் அப்பற்றை காடுகளில் வசிக்கும் ஏனைய உயிரினங்களும் அழிந்துவடைந்து போகின்றன.  

மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களையும் தடுக்க முடியாமல் போகும் என்று தெரிவிக்கப்படுகிறது.   

(கினிகத்தேனை தினகரன் நிருபர்) 

Thu, 01/17/2019 - 10:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை