கொலைச் சதி குற்றச்சாட்டு; பொலிஸ் மாஅதிபரிடம் குரல் பதிவு சோதனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சதிக்குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஒரு அங்கமாக தனது குரல் மாதிரி ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேற்று காலை அரசாங்க பகுப்பாய்வாளர் முன்னிலையில் தோற்றினார்.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு வருமாறு பொலிஸ் மா அதிபர் அழைக்கப்பட்டிருந்தார். நாமல் குமாரவின் கைத்தொலை பேசியில் பதிவாகியுள்ள ஒலிப்பதிவுகளில் பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவு ஒத்துப்போகிறதா என்பதை தெரிந்து கொள்ளவே பொலிஸ் மா அதிபர் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி கொலைச்சதி பற்றி விசாரணை நடத்தும் சி. ஐ. டி. யினர் நாமல் குமாரவின் கைத்தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை அரச பகுப்பாளர்வாளர் திணைக்களம் மற்றும் ஹொங்கொங்கில் உள்ள தகவல் துறை விற்பன்னர்களின் உதவியி்ன் மூலம் மீட்டுள்ளனர். இந்த கூற்றுகள் மூலம் ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டம் இருந்ததற்கான சான்றுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

Tue, 01/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை