நாட்டை கட்டியெழுப்ப தனிநபர் ஒழுக்கமும் அவசியம்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனி நபர் சுதந்திரத்தோடு ஒழுக்கமும் முக்கியமாவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அவ்வாறில்லாவிட்டால் சமூகம் சீரழிந்துவிட வாய்ப்புண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

பாணந்துறைப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சமயங்களூடாக நாட்டை கட்டியெழுப்புவதோடு சகல சமயங்களும் சமூகமும் சிறந்த வழியில் செல்வதற்கான வாய்ப்புக்களையே ஏற்படுத்திக்கொடுக்கின்றது. பௌத்த தர்மமானது ஏனைய மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குகின்றது. இதற்கிணங்க எந்தவிதத் தடையுமின்ற தத்தமது மதங்களை வழிபடும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இது தனி நபர் சுதந்திரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் காலம். தனி நபர் சுதந்திரம் போன்றே ஒழுக்கமும் மிகவும் முக்கியமானவை. அப்போதுதான் சிறந்த சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

 

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை