உறைந்த காலநிலையில் குழந்தை உயிருடன் மீட்பு

ரஷ்யக் கட்டட வெடிப்புச் சம்பவத்தில், கடும் குளிரான காலநிலைக்கு மத்தியில் மீட்புப் பணியாளர்கள் 35 மணி நேரத்திற்கு பின் 11 மாதக் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

அந்தக் குழந்தையின் நிலைமை மோசமாய் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அக்குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நகரமான மெக்னிடொகோர்ஸ்கில் கடந்த திங்கட்கிழமை எரிவாயுக் கசிவு காரணமாக வெடிப்பு நேர்ந்து கட்டடம் சரிந்தது.

சம்பவத்தில் உயிர் தப்பியவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பகலிலேயே அங்கு தட்ப வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 17 டிகிரி செல்சியஸாக உள்ளது. இரவில் அது மேலும் குறையும். இந்நிலையில் இடிபாடுகளுக்கும் குழந்தையின் அழு குரலைக் கோட்டு மீட்பாளர்கள் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டே வன்யா என்ற ஆண் குழந்தையை மீட்டுள்ளனர்.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை