தாய்வான் மறுப்பு

சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் விடுத்துள்ள வேண்டுகோளை தாய்வான் ஜனாதிபதி சை இங் வென் நிராகரித்துள்ளார்.

ஒரே நாடு, இரு ஆட்சிமுறை என்ற கருத்தின் படி சீனாவும் தாய்வானும் ஒன்றாக இணையலாம் என்றும், இதனால் இருநாடுகளும் வளமும் வலிமையும் பெறும் என்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்திருந்தார். தாய்பேயில் பேசிய தைவான் ஜனாதிபதி சை இங் வென், சீன ஜனாதிபதியின் இந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளார். ஒரே நாடு, இரு ஆட்சி முறை என்ற கருத்து, சீனத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது என்றும், தைவான் இதை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களாட்சியின் பாதையை நோக்கிச் சீனா துணிச்சலாகக் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றும் தாய்வான் ஜனாதிபதி சை இங் வென் சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை