மலேசிய புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 31ஆம் திகதி முடிசூடவுள்ளார்.

மலேசியா மன்னராக கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே வழக்கத்திற்கு மாறாக கடந்த 6ஆம் பதவி விலகியதை அடுத்தே புதிய மன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மருத்துவ விடுப்பில் சென்ற மன்னருக்கு, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அந்த நரக முன்னாள் அழகியுடன் திருமணம் நடந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியாகின. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் மன்னரின் இராஜினாமா அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

புதிய மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை நேற்று ஆரம்பமானது. இதற்காக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16வது மன்னர் ஆவார்.

மலேசிய நாட்டில் மன்னரின் முடியாட்சியின் கீழ், கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமுலில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மன்னரின் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோர் அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை