டிரம்பை பாராட்டிய கிம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பற்றி, வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் புகழ்ந்து பேசியிருப்பதாக வட கொரிய அரசாங்க ஊடகம் தகவல் அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண, அவர் கொண்டுள்ள அசாதாரண உறுதியைத் கிம் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருக்கும் இரண்டாவது உச்சநிலைச் சந்திப்பை முன்னிட்டு இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. அடுத்த மாதம் அந்தச் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, கிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொடுத்த கடிதம் ஒன்றை வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிடம் அந்நாட்டு தூதர் வழங்கியுள்ளார்.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை