வெனிசுவேலா குறித்து உலக நாடுகளுக்கு அமெ. எச்சரிக்கை

வெனிசுவேலாவில் ஒருபக்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவுக்கு ஆதரவு அளிக்கும்படியும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும் அமெரிக்கா கூடிய விரைவில் வெனிசுவேலாவில் தேர்தலை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளது. 

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த சனிக்கிழமை பாதுகாப்புச் சபையில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.  

“உலக நாடுகள் ஒரு பக்கத்தை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து ஆட்டமும், தாமதமும் கூடாது. நீங்கள் சுதந்திரத்தின் தரப்பில் நிற்க வேண்டும் அல்லது (நிகொலஸ்) மடுரோ மற்றும் அவரது குழப்பத்தை ஏற்படுத்துபவர்களோடு கூட்டுச்சேர வேண்டும்” என்று பொம்பியோ குறிப்பிட்டிருந்தார்.  

அமெரிக்கா மற்றும் பிராந்திய கூட்டணிகள் குவைடோவை வெனிசுவேல அரச தலைவராக அங்கீகரித்து அந்நாட்டு ஜனாதிபதி மடுரோவை பதவி விலகக் கோரிய நிலையிலேயே பொம்பியோ பாதுகாப்புச் சபையில் உரையாற்றினார்.  

“வெனிசுவேலாவின் ஜயநாயக ஆட்சி மாற்றத்தை மற்றும் அதில் இடைக்கால ஜனாதிபதி குவைடோவின் பங்களிப்பை பாதுகாப்பு சபையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.  

எனினும் வெனிசுவேலாவில் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலை ஒன்றில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. “வெனிசுவேலா அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இல்லை” என்று ரஷ்யாவுக்கான ஐ.நா தூதுவர் வசிலி நெபன்சியா பாதுகாப்புச் சபையில் குறிப்பிட்டார்.  

வெனிசுவேலாவில் எதிர்க் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்நாட்டு பாராளுமன்றம் மாத்திரமே ஜனநாயக முறையில் தேர்வான ஒரே அமைப்பு என்று அங்கீகரிக்கும் அமெரிக்காவின் தீர்மானம் ஒன்று ரஷ்யா, சீனா, தென்னாபிரிக்கா மற்றும் எகுவேடோரிய கிரியா நாடுகளால் பாதுகாப்புச் சபையில் தடுக்கப்பட்டது.      

Mon, 01/28/2019 - 13:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை