`ராட்சசன்’ லேட்டா ரிலீஸானாலும் எனக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு

`` `ராட்சசன்’ தான் என் முதல் படம். அதுக்கப்பறம்தான் `தீரன் அதிகாரம் ஒன்று’, பாலாஜி சக்திவேல் சாரோட `யார் இவர்கள்’, `என் ஆளோட செருப்பக் காணோம்’ படமெல்லாம் கமிட் பண்ணினேன். ஆனால், `ராட்சசன்’ லேட்டாகத்தான் ரிலீஸாச்சு. லேட்டா ரிலீஸானாலும் எனக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு...’’ -  உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், `ராட்சசன்’ படத்தின் `அம்மு’ அபிராமி.

``கோயம்புத்தூரில்தான் `ராட்சசன்’ படம் பார்த்தேன். என் முதல் படம் எப்படி வந்திருக்குனு பார்க்கத்தான் போனேன். ஆனால், தியேட்டரில் நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுக்கிட்டுப் பேசுனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. இடைவேளையில் என்னைப் பார்த்ததும், ஏ அம்மு... அம்முனு கத்துனாங்க. செம ஜாலியா இருந்துச்சு. படம் பார்த்துட்டு என்கிட்ட பேசுன பல பேர், `ஹீரோவோட அக்கா பொண்ணையே வில்லன் தூக்கிட்டான்னா, கண்டிப்பா வில்லனை ஹீரோ கண்டுப்பிடிச்சு அந்தப் பொண்ணை காப்பாத்திடுவார்னு நாங்க நினைச்சோம்’னு சொன்னாங்க. ஆனால், படத்தில் அப்படி நடக்கலை. அதுதான் `ராட்சசன்’ படத்தோட வெற்றிக்குக் காரணம். இதில் ஹீரோயிசமே இல்லாததுதான் படத்தின் ப்ளஸ். இந்தப் படத்தோட ஆடிஷன்ல என்கிட்ட ஒரு சீன் மட்டும்தான் கொடுத்து நடிக்கச் சொன்னாங்க. அப்பறம் என் அப்பாகிட்டதான் கதை பற்றியெல்லாம் பேசுனாங்க. என்கிட்ட எதுவுமே சொல்லலை. படம் பார்த்தப்போதான் எனக்கே கதை தெரியும்.’’

`துப்பாக்கி முனை’ படத்துல உங்க ரோல் என்ன..?

`` `துப்பாக்கி முனை’ படத்துல எனக்கு எம்.எஸ்.பாஸ்கர் சாரோடுதான் அதிகமான சீன்ஸ் இருக்கும். அப்பா - மகளா எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டாகி இருக்கு. என் கரியரோட ஆரம்ப ஸ்டேஜிலேயே ஒரு லெஜண்ட் நடிகரோட வொர்க் பண்ணினது நல்ல அனுபவமா இருந்துச்சு. அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். மத்தப்படி என் ரோல் பற்றியெல்லாம் பேச மாட்டேன். படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.’’

சரி... கதையைப் பற்றி எதுவுமே சொல்ல மாட்டேன்னு சொல்றீங்க; ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த எதாவது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றிச் சொல்லுங்க..?

``இந்தப் படத்தோட ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்துச்சு. அங்க ஒரு மீனவரோட வீட்டில்தான் என்னோட சீன்ஸ் எடுத்தாங்க. அந்த வீட்டில் ஷாமளானு ஒரு அக்கா இருந்தாங்க. அந்த அக்காவுக்கு மூணு பசங்க. ஷூட்டிங் முடியுற வரைக்கும் அவங்களுக்கு நானும் ஒரு பொண்ணா இருந்தேன். அப்படித்தான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. வேற இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும், மதிய சாப்பாடு அவங்க வீட்டுல இருந்து வந்திடும். அந்தளவுக்கு என்னைப் பாசமாப் பார்த்துக்கிட்டாங்க.’’

தமிழ் சினிமாவில் மீடூ பிரச்சினை பெருசாப் பேசப்பட்டுட்டு இருக்கு; ஒரு இளம் நடிகையா அதைப் பார்க்கும் போது உங்களுக்கு பயம் இருக்கா..?

``சத்தியமா எனக்கு எந்த பயமும் இல்லை. ஏன்னா, எந்த ஒரு விஷயமுமே நாம் இடம் கொடுத்தால்தான் நடக்கும்னு நான் நம்புறேன். எனக்கு துணையா என் அப்பா எப்போதுமே என்கூட இருக்கார். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை. அதுமட்டுமல்லாமல், சினிமாத்துறைனாலே தப்பான இடம்னு ஒரு பிம்பம் இருக்கு. என்னைப் பொறுத்தவரை இது பெண்களுக்கு ரொம்பப் பாதுகாப்பான இடம். ஏன்னா, ஒரு பெண் ஐரிகம்பெனியில வேலை பார்த்தால் ஆபீஸுக்கு அவங்களோட அப்பா, அம்மாவோடு போக முடியாது. ஆனால், இங்க ஷூட்டிங்கிற்கு அப்பா -அம்மாவை அழைச்சிட்டுப் போகலாம். அதனால் எப்போதுமே ஒரு நம்பிக்கை இருக்கும்.’’

நீங்க விஜயோட தீவிரமான ரசிகையாமே..?

``ஆமா... நான் தளபதியோட தீவிரமான ஃபேன். என் அப்பா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்கிட்ட சவுண்டு இன்ஜினீயரா வொர்க் பண்ணிட்டு இருக்கார். `பைரவா’ படத்தோட பாட்டைப் பாடுறதுக்காக விஜய் சார் ஸ்டுடியோக்கு வந்திருக்கார்னு அப்பா சொன்னதும், நான் அவசர அவசரமா கிளம்பிப் போனேன். என்னைப் பார்த்ததும் அவர், `எப்படிமா இருக்க; என்ன பண்ற’னு கேட்டார். அதெல்லாம் என் காதில் விழவேயில்லை. அவர்கிட்ட, `சார் ஒரு போட்டோ’னு மட்டும்தான் கேட்டுட்டே இருந்தேன். அன்னைக்கு நான் அவர்கிட்ட பேசின அந்த ஒரு மொமென்ட்டை என்னால் மறக்கவே முடியாது.’’

Thu, 01/10/2019 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை