தமிழர்களின் உணர்வுகள், மனநிலைகளை புரிந்து புதிய ஆளுநர் பணியாற்ற வேண்டும்

வடக்கு கிழக்கு மக்களின் ஒரே கோரிக்கை கட்சி வேறுபாடின்றி நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர் ஒருவர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இச்சூழலில் தமிழ் மக்களின் உணர்வுகள் தேவைகளை அறிந்து சிறந்த சேவையாற்ற ஆளுநர் முன்வர வேண்டுமென வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டு கோள்விடுத்தார்.  

ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் சுரேன் ராகவன் தனது கடமைகளைப் பொறுப் பேற்கும் நிகழ்வு நேற்று (09) யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

வட,கிழக்கு மக்கள் கட்சி வேறுபாடுகளின்றி முன்வைத்த ஒரே அரசியல் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வட,கிழக்கில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தமிழ் பேசும் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையே தற்போது  நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கல்விமான், சிறந்த ஆய்வாளன், இலங்கை தேசிய இனத்தின் வரலாற்றை புரிந்து கொண்ட தமிழர் ஆளுநராக நியமிக்கப்பட்டதையிட்டுப் பெருமைப்ப டுகின்றோம்.  

வடக்கு மாகாணத்தின் உணர்வுகள், தேவைகள், அபிலாசைகள், அரசியல் இலக்குகளை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.ஆளுநர் செயலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் இதற்கான வரலாற்றுத் தொடர்பினை வழங்குவார்கள் என நம்புகின்றேன்.  

வடமாகாண சபை சார்ந்து அல்லது வட மாகாண சபை முறைமை சார்ந்து ஒரு அரசியல் தலைமைத்துவம் அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சூழ்நிலையில் நாட்டின் 6மாகாணங்களில் அரசியல் வெற்றிடம் காணப்படுகின்றது.  

அவ்வாறே வெற்றிடமாகப் பார்க்காமல் இங்குள்ள மக்களின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதிநிதிகளையும் அழைத்து கருத்தை அறிந்து, அவர்களையும் அணைத்துக்கொண்டு

அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று சிறந்த நிர்வாகத்தினை நிறைவேற்ற வேண்டும்.   எந்த இனத்தைச் சேர்ந்தவர் ஆளுநராக சென்றாலும், அந்த மாகாணத்தைச் சார்ந்தவராக  அவர் மாற வேண்டுமென்பதே முக்கியம்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

Thu, 01/10/2019 - 09:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை