சர். பாடசாலை மாணவி சிறந்த பெறுபேறு; பந்துல எம்.பியின் கருத்துக்கு அமைச்சர் எதிர்ப்பு

இம்முறை க.பொ.த. உயர்தர கலைப்பிரிவின் பெறுபேறுகளுக்கமைய சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியே நாட்டில் முதலாவது இடத்தைப்பெற்றிருந்தார். இது தொடர்பில் முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ள கூற்று தொடர்பில் கல்வியமைச்சர் என்றவகையில் தாம் கவலையடைவதாகவும் அந்தக் கூற்றை நிராகரிப்பதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது, தேசிய பாடசாலை மற்றும் சர்வதேச பாடசாலை என வகைப்படுத்த வேண்டும் என்பதாகவே பந்துலவின் கருத்து அமைகிறது. அவர் கூறுவதைப் பார்த்தால் சர்வதேச பாடசாலை மாணவர்கள் சர்வதேச பரீட்சைகளுக்கு மட்டுமே தோற்ற முடியும் என்பதாகவே அமைகிறது.

அவர் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பரீட்சைகளில் தோற்றுவதற்கு இடமளிக்காது இருந்திருக்கலாம். சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெறுபேறுகள் மற்றும் தேசிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெறுபேறுகள் ஆகியவற்றை ஒரே சமயத்தில் ஒன்றாக வெளியி

 

 

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை