மிக வேகமாக உருகும் அண்டார்டிகா பனிக்கட்டி

அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக வேகமாக உருகி வருவது தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக வெப்பமயமாகும் பிரச்சினையை அவர்கள் அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் அது ஆறு மடங்கு அதிகமென்றும் அந்த நிலை உலகெங்கிலுமுள்ள கடல் நீரின் அளவை அதிகரித்துவிடும் என்றும் அவர்கள் கூறினர்.

அண்டார்டிகாவில் உருகும் பனி 1979ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் கடல் நீரின் அளவை அரை அங்குலத்திற்கும் கூடுதலாக உயரச் செய்திருப்பதாக அவர்கள் கூறினர்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

முன்னைய ஆய்வுகளில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் நீரின் அளவு ஒன்று புள்ளி எட்டு மீற்றர் உயருமெனில் பல கடலோர நகரங்களை வெள்ளம் சூழ்ந்துவிடும் என்று கூறப்பட்டது. இதனால் பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை