எழுநூறு ரூபா நாட் சம்பளத்தை எதிர்த்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம், நேற்று கைச்சாத்திடப்பட்டது.

இதில் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய தொழிற் சங்கங்கள் எழுநூறு ரூபாவுக்கு இணங்கி நேற்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட மைக்கு எதிராக மலையகம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

நுவரெலியா, ஹற்றன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், புஸ்ஸல்லாவ, டயகம, அக்கரப்பதனை, திம்புள்ள, போகாவத்தை, தலவாக்கலை, லிந்துலை, ஆகிய பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்க ளால் சில மணி நேரம் போக்குவரத்துகளும் தடைப்பட்டன.

நான்கு மாதங்களாக இழுபறியிலிருந்த கூட்டு ஒப்பந்த விவகாரம்,கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு இணக்கத்துடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.இதன்பிரகாரம் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாயும் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியாக 105 ரூபா என்ற அடிப்படையில், மொத்தச் சம்பளம் 855 ரூபாயும் மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 40 ரூபாயும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டன.

2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரைக்கான நிலுவைக் கொடுப்பனவை,தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்ற நாட்களை அடிப்படையாக வைத்து வழங்கவும் தீர்மானிக் கப்பட்டன. இதற்காக,100 மில்லியன் ரூபாயை, தேயிலைச் சபையிடமிருந்து பெற்று, கம்பனிகளுக்கு வழங்குவதற்கும் அதில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே எட்டப்பட்ட தீர்மானத்தை மீறி, நாட் சம்பளமாக 700 ரூபாவுக்கு இணங்கி நேற்று கைச்சாத்திடப் பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவே மலையகம் முழுதும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் நேற்று நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, அப்புத்தளை, மஸ்கெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்தன. நேற்று கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டதுடன், கோஷங்களையும் எழுப்பினர்.அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுத் தருவதாகக் கூறி வந்த தொழிற் சங்கங்கள் தம்மை ஏமாற்றி விட்டதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

 (ஹற்றன் சுழற்சி நிருபர்)

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை