ரஜினியை முந்திய அஜித்!

27ஆண்டுகளின் பின்னர்தமிழ் சினிமாவில் சாதனை

கடந்த 27ஆண்டுகள் கழித்து தமிழக '​பொக்ஸ் ஒபீஸில்' ரஜினியின் படம் வெளியிடப்பட்ட தினத்தன்று 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும் ஒரே நாளில் வெளியாகின. ரஜினியின் படத்துடன் மோதினால் விஸ்வாசம் என்னவாகும் என்று பேச்சு அடிபட்டது. 

இந்நிலையில் தமிழகத்தில் 'விஸ்வாசம்' 'பேட்ட' படத்தை வசூலில் பின்னுக்குத் தள்ளி விட்டது. 

தமிழகத்தில் படம் வெளியிடப்பட்ட அன்று 'விஸ்வாசம்' முதலிடத்திலும், 'பேட்ட' இரண்டாவது இடத்திலும் இருந்தன. தற்போதும் தமிழகம், கேரளாவில் விஸ்வாசம், பேட்ட படத்தை விட நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது. 

முன்னதாக 1992ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி கமல்ஹாஸனின் தேவர் மகனும், ரஜினியின் 'பாண்டியன்' படமும் வெளியாகின. அப்பொழுது வெளியிடப்பட்ட நாளில் 'தேவர் மகன்' திரைப்படம் 'பாண்டியனை' பின்னுக்குத் தள்ளியது. அதன் பிறகு 27ஆண்டுகள் கழித்து அஜித் படம் அந்தக் காரியத்தை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

'விஸ்வாசம்' படத்தில் உள்ள அளவான குடும்ப கதையமைப்பு அதற்கு கைகொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஸ்வாசம் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டாகி விட்டது. 

"ரஜினியின் 'பேட்ட' படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை இரண்டு படங்களும் சேர்ந்து வருகின்றன, சேர்ந்து நல்ல வசூல் செய்தால் சந்தோஷம்" என்றார் சிவா. இந்நிலையில் விஸ்வாசம் தமிழகத்தில் பேட்ட படத்தை முந்திக் கொண்டு செல்வது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.'பேட்ட' படத்தில் அதீத எதிர்பார்ப்புகள், படத்தின் நீளம் ஆகியவை ஓட்டைகளாக  அமைந்து விட்டன. படத்தில் ரஜினியை தவிர பிற கதாபாத்திரங்களுக்கு  முக்கியத்துவம் இல்லை. இது ரஜினி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால்  மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

விஸ்வாசம்  படத்தை குடும்பக் கதையாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படத்தைப் பார்க்க  குடும்பம், குடும்பமாக தியேட்டருக்குச் செல்கிறார்கள். 

அஜித்துக்கு  வயதாகி விட்டதை மறைத்து இளமையாக காட்ட சிவா முயற்சிக்காதது ஆறுதல். மேலும்  அஜித், நயன்தாரா இடையேயான காதல் காட்சிகள் நாசுக்காக இருந்தன. குடும்ப  ரசிகர்களை கவர்ந்து விட்டது. வயதிற்கேற்ப காதல் செய்துள்ளார் அஜித். ஹீரோ  என்றால் எப்பொழுது பார்த்தாலும் வில்லனை அடித்து நொறுக்கி ஜெயிப்பார்  என்று இல்லாமல் அவரும் அடி வாங்குவார் என்று யதார்த்தத்தை காட்டியுள்ளார்  சிவா. இதுவே வெற்றிக்கான காரணங்களாக அமைந்து விட்டன. 

Mon, 01/14/2019 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை