பிரான்ஸ் எங்கும் தொடர்ந்து மஞ்சள் அங்கி ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ் எங்கும் புதிதாக மீண்டும் மஞ்சள் அங்கி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருப்பதோடு பல டஜன் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொடர்ச்சியாக ஒன்பதாவது வாரமாக சனிக்கிழமை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைநகர் பாரிஸில் மோதல் ஏற்பட்டதோடு தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. நாடெங்கும் சுமார் 84,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றிருப்பதோடு இது கடந்த வாரத்தை விடவும் அதிகம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராகவே தேசிய அளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மேலும் பல நிபந்தனைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நீடித்து வருகிறது.  

முந்தைய ஆர்ப்பாட்டங்களில் மோதல்கள், பொருட்களுக்கு சேதங்கள் ஏற்பட்டதால் பாரிஸ் நகரில் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். 

வரிகளை பெருமளவு குறைப்பது, குறைந்தபட்ச சம்பளத்தில் 100 யூரோக்கள் அதிகரிப்பது போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிவித்தார். 

அதையடுத்து, மஞ்சள் அங்கிப் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், தற்போது 9ஆவது வாரமாக அந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.   

Mon, 01/14/2019 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை