வீடியோ பதிவேற்றுவதில் யூடியும் புதிய விதிகள்

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் குறும்புத்தனமான வீடியோக்களை பதிவேற்றுவது பற்றிய விதிகளை யூடியுப் கடுமையாக்கியுள்ளது. சலவை சோப்புகளைக் கடிப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களை வீடியோவாக்கி பதிவேற்றுவதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூடியுப் தெரிவித்துள்ளது.

யூடியுப் சமுகதளத்தில் பதிவேற்றப்பட்ட சில வீடியோக்களைப் பார்த்த சிலர் அதே போன்று செய்ய முயன்று உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து யூடியுப் வீடியோ தொடர்பான விதிகளைக் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, முறையான அனுமதியின்றி ஒரு வீட்டுக்குள் அத்துமீறுவது, துப்பாக்கிச் சூடு போன்ற செயல்கள் மூலம் ஆபத்தில் இருப்பது போன்று மக்களை எண்ணத் தோன்றும் அனைத்து வேடிக்கைச் செயல்களின் வீடியோக்களும் தடை செய்யப்படும்.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை