செல்லப்பிராணியாக வளர்த்த 700 கிலோ முதலை தாக்கி பெண் பலி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் பெண் ஒருவரை செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட முதலை ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.

வட சுலாவெசியின் மினஹசா நகரத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

முத்துப் பண்ணையில் பணியாற்றிக்கொண்டிருந்த 44 வயது டெஸ்ஸி டுவோ 4.4 மீற்றர் நீளம் கொண்ட முதலையால் கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டார். அவருடைய சடலத்தைப் பண்ணையின் மற்ற பணியாளர்கள் அடுத்த நாள் கண்டெடுத்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை அன்று மெர்ரி என்று அழைக்கப்பட்ட அந்த முதலைக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு அதன் கூண்டிலிருந்து அகற்றப்பட்டது. இந்த முதலை 700 கிலோகிராம் எடைகொண்டதாகும்.

மூன்று மணிநேரம் நீடித்த அந்தப் பணியில் இராணுவ வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலர் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக அந்தப் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த அந்த முதலை பின்னர் பாதுகாப்புப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பண்ணை மற்றும் முதலையின் உரிமையாளரான ஜப்பான் நாட்டவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை