நெடுங்குளம் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

RSM
நெடுங்குளம் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-Jaffna Nedunkulam Land Acquisition Stopped

மக்கள் எதிர்ப்பு; பிரதேச செயலாளுக்கு மகஜர்

யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம்  சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்ற (25) பெரும் எதிர்ப்பைத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

நெடுங்குளம் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-Jaffna Nedunkulam Land Acquisition Stopped

இந்தப் பகுதியில் உள்ள 3,000 ஏக்கர் காணி அதாவது 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால்; காணி சுவீகரிப்பு அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

நெடுங்குளம் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-Jaffna Nedunkulam Land Acquisition Stopped

உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது, என்றும் அந்தப் பகுதியில் உள்ள 89 பரப்பு காணி உரிமையாளரை பிரதேச செயலளர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுங்குளம் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-Jaffna Nedunkulam Land Acquisition Stopped

அச்சுறுத்தல்களை மீறியும் காணி உரிமையாளர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரிவித்த பின்னரும், பிரதேச செயலாளர் அப்பகுதி மக்களுடன் காணி சுவீகரிப்போம். சுவீகரிப்பில் தலையிடக் கூடாது என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நெடுங்குளம் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-Jaffna Nedunkulam Land Acquisition Stopped

கடந்த வருடம் நீதிமன்றத்தினால் அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களுக்கு காணி வழங்குவதாக கூறியும் இதுவரை காணி வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியதுடன், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும், மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து தடுப்போம் என்றும், கூறியதை தொடர்ந்து, அப்பகுதி கிராம சேவையாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள், காணி அளப்பதை நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், காணி சுவீகரிப்பை எதிர்த்து தங்களது கையொப்பங்களுடன், பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில், யாழ்.மாநகர பிரதி முதல்வர் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவாக, தமது கருத்துகளை தெரிவித்தனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Fri, 01/25/2019 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை