காசாவில் ஹமாஸ் நிலை மீது இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

காசாவில் இருந்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறி அந்த முற்றுகை பகுதி மீது இஸ்ரேல் படை எறிகணைகளை வீசியுள்ளது.

காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் நிலை மீது கடந்த செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அன்றைய தினம் காசாவில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெய்த் ஹனுௗன் மற்றும் வடக்கு காசாவில் இருக்கும் தமது இரு கண்காணிப்பு முகாம்கள் தாக்கப்பட்டதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.

எகிப்து மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் எட்டப்பட்ட ஒரு பலவீனமான யுத்த நிறுத்தம் காசாவில் கடந்த சில வாரங்களாக ஒப்பீட்டளவில் அமைதியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் வாழும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேல் மற்றும் எகிப்து முன்னெடுத்திருக்கும் முற்றுகையால் கடந்த 11 ஆண்டுகளாக நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இந்த முற்றுகை அந்தப் பகுதியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருப்பதோடு உணவு மற்றும் அத்தியாவசி பொருட்களை பெறுவதிலும் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை