ஜப்பான் கடைகளில் ஆபாச சஞ்சிகை விற்பனை நிறுத்தம்

ஜப்பானில் அதிகமான இடங்களில் கடைவைத்திருக்கும் 7–இலெவன், லோசன் இன்க் ஆகிய நிறுவனங்கள் ஆபாச சஞ்சிகைகளின் விற்பனையை நிறுத்தவுள்ளன.

இவ்வாண்டு நடைபெறவுள்ள ரக்பி உலகக் கிண்ணப் போட்டி மற்றும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அதற்குக் காரணமாகும்.

எதிர்வரும் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு அதிகமான சுற்றுலாப்பயணிகள் ஜப்பானுக்குச் செல்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான சூழலை உருவாக்கித்தரும் நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக 7–இலெவன் நிறுவனம் தெரிவித்தது. ஜப்பானில் 20,000க்கும் அதிகமான கடைகளை அந்நிறுவனம் கொண்டுள்ளது.

ஆபாச சஞ்சிகை மற்ற சஞ்சிகைகளுடன் கலந்து கடையில் காட்சிக்கு வைக்கப்படும்போது அது தவறான எண்ணத்தை உருவாக்கக்கூடும் என்று கடைகள் அஞ்சுகின்றன.

ஒருகாலத்தில் 7–இலெவன் கடைகளுக்கு ஆண் வாடிக்கையாளர்கள் அதிகமாகச் சென்றனர். அவர்களின் தேவைக்கேற்ப பொருள்கள் வைக்கப்பட்டன.

காலப்போக்கில் 7–இலெவன் கடைகளுக்குக் குடும்பத்தினர், சிறுவர்கள், மூத்தோர் ஆகியோரும் அதிகம் செல்வதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் 7–இலெவன் தெரிவித்தது.

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை