இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களுக்கு சுருண்டது

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் மேற்கிந்தியதீவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ஓட்டங்களில் சுருண்டது.

மேற்கிந்தியதீவு - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியதீவு 8 விக்கெட்டுக்கு 264 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 2-ம் நாளான நேற்றுமுன்தினம் மேற்கிந்தியதீவு 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி மேற்கிந்தியதீவின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ஓட்டங்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ஓட்டங்கள் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

212 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய மேற்கிந்தியதீவு 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் மேற்கிந்தியதீவு வலுவான நிலையில் உள்ளது.

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை